search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர்கள் கைது"

    • காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் சுங்கசாவடி அருகே இன்று அதிகாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீசார் பாலகிருஷ்ணன், கோவிந்தன், ஏட்டு காவேரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் வந்தது.

    இந்த காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் மற்றும் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிடிப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பார்வையிட்டனர். இவற்றை காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுமேர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண் சிங் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தான், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடை உரிமையாளர் தேவா என்பவருக்கு இந்த ஹான்ஸ் மற்றும் குட்கா கொண்டு செல்வதாகவும், அவருடைய முகவரி ஏதும் தனக்கு தெரியாது எனவும், வெளியூரில் இருந்து இவற்றை கடத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கல்யாண் சிங் மற்றும் அந்த காரில் மாற்று டிரைவராக பணிபுரிந்த செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சொகுசு காரில் 20 மூட்டை குட்கா கடத்தி கொண்டு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    ராமாபுரம், ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான கவுதம், மாரிமுத்து, சதிஷ் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கவுதம் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • லாரி உரிமையாளரான ஞானதிரவியம் எம்.பி.யின் மகன் தினகரனை தேடி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரிகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதில் எந்தவித அனுமதியின்றி கிராவல் மண் (கனிம வளம்) கேரளாவிற்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கனரக லாரியை ஓட்டி வந்த அம்பை தாலுகா புலவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 28) மற்றும் சங்கரன்கோவில் தாலுகா சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் (42) ஆகியோரை பழவூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    மேலும் 2 கனரக லாரிகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். விசாரணையில் அந்த 2 லாரிகளும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேஷ், ஜெயபாலன் மற்றும் லாரிகளின் உரிமையாளர் தினகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். லாரி உரிமையாளரான ஞானதிரவியம் எம்.பி.யின் மகன் தினகரனை தேடி வருகின்றனர்.

    • 2 லாரி பறிமுதல்
    • 7 யூனிட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    கோவை:

    மதுக்கரை வட்டம் ஒத்தகால்மண்டபம் வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் மதுக்கரை நாச்சிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் மணல் அனுமதி இல்லாமல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கலை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரை பிடித்து, மணல் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோன்று கோவை மாவட்ட சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் வாளையார் சோதனை சாவடி அருகே ஆய்வு செய்தனர்.அப்போது அந்த வழியாக வந்த கேரளா லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 7 யூனிட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு வருவாய் ஆய்வாளர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவரை பிடித்து கே.ஜி.சாவடி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சோனு (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×